+79100000143 - Russia
+919626281306 - India
KEC in Tamil
KEC-நிறுவனமானது ரஷ்யாவில் படித்து முடித்த மருத்துவர்களாலும் அங்கு மருத்துவராக மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்களாலும் நடத்தப்படுவதாகும். எங்கள் நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவிலிருந்து மருத்துவ மேற்படிப்புக்காக அனுப்ப படுகிறார்கள்.
அனுப்பப்படும் மாணவர்களுக்கு ரஷ்யாவில் தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் எங்கள் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் உடனிருந்து வழங்கி வருகிறார்கள். மாணவ/மாணவிகளின் மருத்துவ படிப்பு முடியும் வரை எங்கள் நிறுவனத்தை சார்ந்தவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.
ரஷ்யா ஏன்?
ரஷ்யாவில் மாணவர்கள் ஐரோப்பிய முறைப்படி(European System) 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். ரஷ்ய மருத்துவக் கல்வி உலகத்தரம் வாய்ந்தவை, மேலும் மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள நாடாகும். ரஷ்யாவில் அனைத்து மருத்துவ பல்கலைக்கழகங்களும், மருத்துவமனைகளும் அந்நாட்டு அரசாங்கத்தால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா உலகிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடு, மட்டுமல்லாது பொருளாதாரம், தொழிற்நுட்ப வளர்ச்சியிலும் அமெரிக்காவுடன் போட்டிபோடும் நாடாகும். எழில்மிகு கண்கவர் பிரதேசங்களையும், அழகிய நகரங்களையும் கொண்டுள்ளது.
600-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களும் 2500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் உள்ளன. இவற்றுள் 60-க்கும்மேற்பட்டவை மருத்துவ பல்கலைக்கழகங்கள். ரஷ்ய மக்கள் 100% கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.ரஷ்யாவின் துனை நாடுகளான கிர்கிஸ்தான், உக்ரைன், கசகஸ்தான் போன்ற நாடுகளும் சிறந்த மருத்துக்கல்வியை வழங்குகின்றன.
ரஷ்ய மக்கள் அனைத்து அயல்நாட்டு மாணவர்களிடமும் அன்பாக பழகக்கூடியவர்கள். மேலும் கல்லூரிகளில் மலேசியா, ஸ்ரீலங்கா, பிரேசில், நேபால், பங்களாதேஷ், நைஜீரியா போன்ற 25-க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் படிக்கின்றனர். ஆகவே மாணவ/மாணவிகள் போதுமான உலக அறிவையும், வாழ்க்கையில் எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திறமையை வளர்த்துக் கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) வரிசை படுத்தப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகங்களில் ரஷ்ய பல்கலைக்கழகங்கள் முக்கிய இடங்களை பிடித்துள்ளன. (NMC)தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பலகலைக்கழகங்களுக்கு மட்டுமே KEC- ன் மூலம் மாணவ மாணவிகள் அனுப்பப்படுகிறார்கள்.
மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஐரோப்பிய பட்டங்கள்(European Degree) வழங்கப்படுவதால் அவர்கள் உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் வேலை பார்பதற்கு தோதுவாக உள்ளது.இந்தியாவில் சட்டபூர்வமாக மருத்துவராக பணியாற்றுவதற்கு இந்திய மருத்துவ குழுவால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தகுதி சான்றிதழ் (ELIGIBLITY CERTIFICATE)
2002 -ம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மருத்துவ மேற்படிப்புக்காக செல்லும் மாணவ/மாணவிகள் அகில இந்திய மருத்துவ குழுவில் (MCI), தான் இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கிறேன் என்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்(Eligibility Certificate) வழங்கப்பட்டு வந்தது.
NEET / NMC / NBE / FMGE.
2018-2019 -ம் ஆண்டு முதல் Medical Council of India (MCI) கலைக்கப்பட்டு National Medical Commission (NMC) செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2018-2019 -ம் முதல் வெளிநாடுகளில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் National Eligibility-cum-Entrance Test (NEET) தேர்வில் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள் National Board of Examination (NBE) -ஆல் நடத்தப்படும் Foreign Medical Graduates Examination (FMGE) தேர்வில் வெற்றிப்பெற்ற பிறகு ஓராண்டு மருத்துவ சேவைக்குபின் மருத்துவர் பதிவெண் வழங்கப்படும். இவைகளை பற்றிய அனைத்து தகவல்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.
அட்மிஷனுக்குத் தேவையானவை.
1.10-ம் வகுப்பு சான்றிதழ்,
2.12-ம் வகுப்பு சான்றிதழ்,
3.NEET தேர்வில் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்,
4.பாஸ்போர்ட்,
5.மாணவர்/மாணவி 17 வயது நிரம்பியவர்களாக இருத்தல் வேண்டும்.